'செக்கச் சிவந்த வானம்' படத்தின் ஹிட்டை தொடர்ந்து மணிரத்னம் என்ன படம் எடுக்க போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். வரலாற்று புனைவான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என்று கடந்த ஒருவருடமாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது.

Advertisment

maniratnam with lal

இந்த படத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலிவுட் என்று இந்தியசினிமாவின் அனைத்து சினிமாத்துறைகளிலும் நடிக்க வைக்க நடிகர்கள் தேர்வு கடந்த ஒருவடமாகவே நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c823bb49-ecfc-4e93-a613-e562fa6d5018" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_0.jpg" />

Advertisment

ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள், தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகலை கற்றுக்கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கூட இயக்குனர் மணிரத்னம் பிரபல சண்டை பயிற்சியாளர் ஷாம் கவுசலுடன் தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அடுத்த மாதம் டிசம்பர் 12ஆம் தேதி தாய்லாந்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. மணிரத்னத்தின் கனவு படமான இதில் ஒளிப்பதிவு முதல் கலை இயக்குனர் வரை பெரிய ஆட்களை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாத்துறையில் நீளமாக முடிவளர்த்து வருபவர்களை பார்த்து இவர்களெல்லாம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் கணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராதவாரு மணிரத்னம் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார். ஆனால், இதை பிரபல வில்லன் நடிகர் லால் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டுடைத்துள்ளார். அதில், “எனக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நாள் ஆசை, கடல் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். தற்போது மீண்டும் மணிரத்னம் ஒரு வரலாற்று படத்தில் போர் வீரனாக நடிக்க அழைத்திருக்கிறார். இந்த படத்திற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும் இதில் என்னுடன் ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.